< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சுற்றுச்சூழல் தின விழா
|11 July 2023 10:12 PM IST
மடுகரையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி
நெட்டப்பாக்கம் தொகுதிமடுகரையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை வசந்தி, மாநில சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் சமுதாய நலப்பணித்திட்ட பெயர் பலகையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சிறப்பு விருந்தினராக புதுமை பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மின்சார மோட்டார் வாகனங்களால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். விழாவில் அறிவியல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர்கள் நித்யா, தேன்மொழி, ஜெயபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.