< Back
புதுச்சேரி
என்ஜினீயர் தற்கொலை
புதுச்சேரி

என்ஜினீயர் தற்கொலை

தினத்தந்தி
|
26 Jan 2023 12:13 AM IST

மன உளைச்சல் காரணமாக பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

கோவிந்தசாலை நேருநகர் ஜே.வி.எஸ். வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பாலாஜி (வயது 23), என்ஜினீயர். இவர் சமீபகாலமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்