வேலைவாய்ப்பு முகாம்
|உழவர்கரை நகராட்சி சார்பில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி
உழவர்கரை நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் சனிக்கிழமை தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் கொட்டுப்பாளையம் நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் நடக்கிறது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டம் தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். வாரம் 2 நாட்கள் விடுப்பு கொடுக்கப்படும். அடிப்படை தொழில்நுட்ப திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.