< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மின்துறை குறைபாடுகளை ஒரு மாதத்தில் சரிசெய்ய வேண்டும்
|26 Jun 2023 10:55 PM IST
முக்தியால்பேட்டையில் மின்துறை குறைபாடுகளை ஒரு மாதத்தில் சரிசெய்ய வேண்டும் என பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
முத்தியால்பேட்டை
முத்தியால்பேட்டை தொகுதியில் நிலவும் மின்துறை குறைகள் சம்பந்தமாக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். குறிப்பாக பல்வேறு இடங்களில் புதைவட கேபிள்கள் பழுதுநீக்கி அந்த பள்ளங்கள் இதுவரை மூடப்படாமல் உள்ளது சம்பந்தமாகவும், ஊழியர்கள் பொதுமக்களிடம் சுமுகமான நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் இந்த குறைபாடுகளை ஒரு மாதத்துக்குள் சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தொகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாகவும் உறுயளித்தனர்.