< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தீப்பிடித்து எரிந்த மின்கம்பம்
|29 Jun 2023 11:43 PM IST
அரியாங்குப்பம் அருகே மழையின்போது மின்கம்பம் தீப்பிடித்து எரிந்தது.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம், தவளக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இன்று மாலை திடீரென்று மழை பெய்தது. அப்போது அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலையில் காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ தானாகவே அணைந்துவிட்டது.
மழை காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து, மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் மின்கம்பியை சீரமைத்தனர்.
மழையின்போது மின்கம்பத்தில் தீப்பிடித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.