< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மின் மோட்டார் திருட்டு
|27 Sept 2023 11:48 PM IST
திருநள்ளாறு பகுதியில் மின்மோட்டார் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநள்ளாறு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்கு வீதியை சேர்ந்தவர் கென்னடி. இவர் புதுச்சேரி மின் திறன் குழுமத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது விவசாய தோட்டத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டாரை சம்பவத்தன்று மர்மநபர் திருடிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து திருநள்ளாறு போலீசில் கென்னடி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் மோட்டாரை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.