< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முதியவர் தற்கொலை
|30 Aug 2023 9:58 PM IST
திருநள்ளாறு அருகே தீராத வயிற்று வலி காரணமாக முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
நிரவி
திருநள்ளாறு அடுத்த அக்கரைவட்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 62). இவரது மனைவி தனம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். தனியாக வசித்து வந்த நாராயணசாமி வீட்டில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள நாராயணசாமி வயிற்று வலிக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சோடா குடித்து வந்துள்ளார். ஆனாலும் வயிற்றுவலி தீரவில்லை.
இந்த நிலையில் அவர் வீட்டு மூங்கில் உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.