< Back
புதுச்சேரி
முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
15 Jun 2023 11:15 PM IST

புதுவையில் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

முதியோர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து குரல் எழுப்பும் நாளாக ஜூன் 15-ந்தேதியை உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது இல்லத்திலிருந்து இந்த ஊர்வலத்தை தொடங்கிவைத்து முதியோர் நலன் குறித்த அறிக்கையையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் புதுவையின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று பாகூரில் நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்