< Back
புதுச்சேரி
கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி

கல்வித்துறை அலுவலகம் முற்றுகை

தினத்தந்தி
|
28 Aug 2023 9:28 PM IST

காரைக்கால் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக்கோரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

காரைக்கால்

புதுச்சேரி அரசு காரைக்காலில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் 126 பேரை புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து 88 பேரை காரைக்காலுக்கும் பணியிட மாறுதல் செய்வதாக அறிவித்துள்ளது. எனவே, காரைக்கால் மாவட்ட அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, மக்கள் போராட்டக் குழு சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, புதுச்சேரி அரசுக்கு எதிராகவும், கல்வித்துறைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்