< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல்
|10 Oct 2023 9:53 PM IST
திருநள்ளாறு அருகே சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோட்டுச்சேரி
திருநள்ளாறை அடுத்த நல்லம்பலை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் குடித்துள்ளார். அப்போது அவர் சத்தம் போட்டு பேசியதாக தெரிகிறது. அங்கு கடை வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த பரமசிவம் என்பவர் தன்னை தான் திட்டுவதாக கூறி பிரசாந்தை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, கிருஷ்ணன் ஆகியோரும் சேர்ந்து பிரசாந்தை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தேனூர் சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவம் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.