< Back
புதுச்சேரி
குடிபோதையில் ரகளை; 4 பேர் கைது
புதுச்சேரி

குடிபோதையில் ரகளை; 4 பேர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2023 9:43 PM IST

வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்

நெட்டப்பாக்கம்- மடுகரை ஏரிக்கரை சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகே சிலர் குடிபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற நெட்டப்பாக்கம் போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பண்ருட்டியை சேர்ந்த சஞ்சய் (வயது22), அருள்மணி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் முத்தியால்பேட்டை எல்லையம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட பன்னீர்செல்வம், முதலியார்பேட்டை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட வேணு (41) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்