< Back
புதுச்சேரி
புதுச்சேரி
குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது
|16 Jun 2023 10:00 PM IST
லாஸ்பேட்டையில் குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை
புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் நேற்று இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மதுக்கடை முன்பு 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த எழில் (வயது 31), கோட்டக்குப்பத்தை சேர்ந்த சாந்தநாதன் (26) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.