< Back
புதுச்சேரி
புதுச்சேரி
போதைப்பழக்கம் எல்லோரையும் சீரழித்துவிடும்
|24 Jun 2023 10:27 PM IST
போதைப்பழக்கம் எல்லோரையும் சீரழித்துவிடும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் வேதனை தெரிவித்துள்ளார்
புதுச்சேரி
புதுவை கடற்கரை சாலையில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் நடந்த ஊர்வலத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசும்போது, போதைப்பொருள் மாணவர்களிடம் யார் மூலமாக வந்து சேருகிறது என்பதை தைரியமாக எடுத்து சொல்ல வேண்டும். இந்த தீய பழக்கம் எல்லோரையும் ஒரு காலத்தில் சீரழித்துவிடும்.
யாராவது தவறு செய்தால் பெற்றோருக்கு தெரிவிக்க பயமாக இருந்தால் காவல்துறைக்கோ பள்ளி நிர்வாகத்துக்கோ தகவல் தரவேண்டும். இதன் மூலம் முழுமையாக போதைப்பொருட்கள் பழக்கம் தடுக்கப்படும். சட்டம் தன் கடமையை செய்தாலும் உங்களை போன்றவர்கள் மிகப்பெரிய பொறுப்புணர்வை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதன் நோக்கம் முழுமையாக வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார்.