< Back
புதுச்சேரி
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
புதுச்சேரி

வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

தினத்தந்தி
|
2 Sept 2023 10:39 PM IST

காரைக்காலில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

காரைக்கால்

காரைக்கால் நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கும், மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்காதவாறும், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

அதன்படி திருநள்ளாறு அம்பகரத்தூர் கிராம பஞ்சாயத்துகளில், வரும் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாக்கடை கால்வாய் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை ஆணையர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார்.

இந்த பணிகள் திருநள்ளாறு தொகுதி முழுவதும் தினமும் நடைபெறும் எனவும், வரும் மழைக்காலத்திற்குள் இப்பணிகள் செய்து முடிக்கப்படும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்