< Back
புதுச்சேரி
அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி
புதுச்சேரி

அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி

தினத்தந்தி
|
17 Oct 2023 10:38 PM IST

அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்குவது தொடர்பாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்குவது தொடர்பாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தீபாவளி சிறப்பு அங்காடி

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் தீபாவளி பண்டிகயையொட்டி ஆண்டுதோறும் புதுவை மற்றும் புதுவையில் உள்ள சில பகுதிகளில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்படும். மேலும் பொது மக்களுக்கு சலுகை விலையில் மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு அங்காடி திறப்பது தொடர்பாக இன்று காலை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

எங்கெல்லாம் அமைப்பது?

தீபாவளி சிறப்பு அங்காடிகள் எங்கெல்லாம் அமைப்பது?. எவ்வளவு பொருட்கள் கொள்முதல் செய்வது?, விலை நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு அதிக இடையூறு இல்லாமல் வினியோகம் செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் பங்கஜ் குமார், இயக்குனர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர் தயாளன் மற்றும் பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்