< Back
புதுச்சேரி
அங்கன்வாடிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம்
புதுச்சேரி

அங்கன்வாடிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம்

தினத்தந்தி
|
20 July 2023 11:07 PM IST

புதுவையில் அங்கன்வாடிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரியில் அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு கொண்டைக்கடலை, முட்டை, பச்சை பயறு, கேழ்வரகு உள்ளிட்ட 10 வகையான சத்துள்ள உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பொருட்கள் மாதந்தோறும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

புதுவை நகரப்பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளுக்கு இன்று இந்த ஊட்டச்சத்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக லாரிகளில் கொண்டு வரப்பட்ட இந்த பொருட்கள் ரோடியர் மில் மைதானத்தில் வைத்து மினி லாரிகளில் ஏற்றப்பட்டு அங்கன்வாடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதேபோல் நேற்று கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடிகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்