< Back
புதுச்சேரி
வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
புதுச்சேரி

வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தினத்தந்தி
|
15 July 2023 10:46 PM IST

புதுவையில் பாதாள சாக்கடையுடன் கழிவுநீரை இணைக்காவிட்டால் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்தவும் பல இடங்களில் பாதாள சாக்கடை வசதி பொதுப்பணித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை பல குடியிருப்புகளில் உருவாகும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் பாதாள சாக்கடையில் நோக்கம் நிறைவேறாமல் சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. எனவே உழவர்கரை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் பொதுப்பணித்துறையை அணுகி பாதாள சாக்கடை இணைப்பை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் உழவர்கரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2021-ன் படி அபராதம் விதிப்பதோடு, வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க பொதுப்பணித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்