< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் நிறம் மாறிய கடல் நீர் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
|21 Dec 2023 6:28 AM IST
கடல் நீர் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 7 முறை கடல் நீர் செந்நிறமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடல் நீர் நிறம் மாறியது தொடர்பாக புதுச்சேரியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், கடல் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.