< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மதுபோதைக்கு மாற்றுத்திறனாளி பலி
|17 Jun 2023 10:20 PM IST
கோட்டுச்சேரி அருகே மதுபோதைக்கு மாற்றுத்திறனாளி பலியானார்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி அடுத்த பூவம் குப்புச்செட்டி சாவடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 34). மாற்றுத்திறனாளி. இவர் வேலைக்குச் சென்று கிடைக்கிற பணத்தை மது குடித்து வீணடித்து வந்துள்ளார். சமீபத்தில் மது போதையால் உடல்நிலை மோசமான நிலையில், அதற்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தியநாதன் உயிரிழந்தார்.
இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.