< Back
புதுச்சேரி
மழைநீரில் வழுக்கி விழுந்த மாற்றுத்திறனாளி பலி
புதுச்சேரி

மழைநீரில் வழுக்கி விழுந்த மாற்றுத்திறனாளி பலி

தினத்தந்தி
|
19 Jun 2023 9:28 PM IST

திருநள்ளாறில் மாற்றுத்திறனாளி மழைநீரில் வழுக்கி விழுந்து பலியானார்.

திருநள்ளாறு

காரைக்காலை அடுத்த செருமாவிலங்கை சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45) மாற்றுத்திறனாளியான இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். நேற்று வீட்டின் முன்பு தேங்கியிருந்த மழைநீரில் வழுக்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்