< Back
புதுச்சேரி
பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்
புதுச்சேரி

பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்

தினத்தந்தி
|
1 Aug 2023 9:30 PM IST

திரு-பட்டினம் அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர், கூறினார்.

திரு-பட்டினம்

திரு-பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்று மாணவர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். அதில் நீண்ட நாள் விடுமுறை எடுத்திருந்த மாணவர்களை அழைத்து, தொடர் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும், தினமும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கற்றுக்கொள்ள வேண்டும், படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுரை கூறினார்.

முன்னதாக திரு-பட்டினம் கருடப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை பார்வையிட்ட கலெக்டர், அதனை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் பள்ளியில் கழிவறை, குடிநீர் போன்ற வசதிகள் குறித்து மாணவர்களிடம் கலெக்டர் குலோத்துங்கன் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்