< Back
புதுச்சேரி
புதுச்சேரி
திருநள்ளாறில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை
|3 Oct 2023 12:06 AM IST
திருநள்ளாறில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்பட்டது.
திருநள்ளாறு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் போலீஸ் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்படும் எனவும் முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விற்பனை தொடங்கியதும் திருநள்ளாறு பகுதி மக்களுடன் வெளிமாநில பக்தர்கள், பயணிகள் என வேட்டி வாங்க கடை முன்பு திரண்டனர். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது. 30 நிமிடத்திலேயே 100 வேட்டிகளும் விற்று தீர்ந்தன.