< Back
புதுச்சேரி
கஞ்சா புகைத்த பல் மருத்துவ கல்லூரி மாணவர் கைது
புதுச்சேரி

கஞ்சா புகைத்த பல் மருத்துவ கல்லூரி மாணவர் கைது

தினத்தந்தி
|
17 July 2023 10:57 PM IST

பாகூர் அருகே கஞ்சா புகைத்த பல் மருத்துவ கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்

பாகூர் அருகே கஞ்சா புகைத்த பல் மருத்துவ கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பல் மருத்துவ கல்லூரி மாணவர்

பாகூர் போலீசார் இன்று பின்னாச்சிக்குப்பம் சாலையில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று இருந்த வாலிபர் சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரது கையில் கஞ்சா வைத்திருந்ததும், கஞ்சா மூலம் சிகரெட் புகைத்ததும் தெரியவந்தது.

பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகாலாந்தை சேர்ந்த கெவி வீட்டோ (23) என்பதும், தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ். 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார் என்பதும் தெரிவவந்தது.

கைது

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 டாக்டர்கள், என்ஜினீயர் உள்பட 3 பேரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குற்றாலீசுவரன் என்பவரிடம் கெவி வீட்டோ கஞ்சா வாங்கியதும், அதனை தினமும் கொஞ்சம், கொஞ்சமாக சிகரெட் மூலம் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

------

மேலும் செய்திகள்