< Back
புதுச்சேரி
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 Sept 2023 10:18 PM IST

காரைக்கால் நிரவி பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நலவழித்துறை சார்பில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காரைக்காலை அடுத்த நிரவி காவேரி பப்ளிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் தலைமை தாங்கினார். நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் தேனாம்பிகை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு ஒழிப்பில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் மாணவர்கள், ஆசிரியர்களிடம் பள்ளியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், மழைத்தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் டெங்கு புழுக்கள் இருக்கிறதா? என தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் சிவவடிவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்