< Back
புதுச்சேரி
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
28 Sept 2023 11:17 PM IST

அரியாங்குப்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இருவார தூய்மை திருவிழா கிராம பஞ்சாயத்துக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியாங்குப்பம் தொகுதி ராதாகிருஷ்ணன் நகர் கிராம பஞ்சாயத்து விளையாட்டு திடலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் மற்றும் சுற்றுப்புற சுகாதார தூய்மை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து பூரணாங்குப்பம் மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமையில் சிலம்பாட்ட வீரர்கள் பல்வேறு வகையான வீர விளையாட்டுகளை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர்கள் சுரேஷ், ரகுராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்