< Back
புதுச்சேரி
பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 Aug 2022 11:06 PM IST

புதுச்சேரி அண்ணா சாலையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி அண்ணா சாலையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு பிரதேச தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுதா, பொதுச்செயலாளர் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குஜராத் கோத்ரா வன்முறை வழக்கில் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் 11 பேரை ஆயுள் தண்டனை குறைப்பு செய்து விடுவித்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் விஜயா, சத்தல் நாயக், அன்பரசி ஜீலியட், இளவரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்