< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|11 Aug 2023 9:47 PM IST
பணிநிரந்தரம் செய்யக்கோரி வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுவை குரும்பாப்பட்டு காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், நிலுவையில் உள்ள 48 மாத சம்பளத்தை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை காமராஜர் வேளாண் அறிவியல் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி வாசலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், கவுரவ தலைவர் அபிசேகம், பொருளாளர் அந்தோணி, செயலாளர் முத்துராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க செயலாளர் யோகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.