286 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்
|அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சார்பில் பொறியியல், நர்சிங், பிசியோதெரபி, பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்த 286 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
திருபுவனை
அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சார்பில் பொறியியல், நர்சிங், பிசியோதெரபி, பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்த 286 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழா
புதுச்சேரி அரியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் இந்திராணி நர்சிங் கல்லூரி, வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரிகளில் பட்டம் முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரியின் சாய் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்விக்குழுமத்தின் தாளாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிறுவனர் ராதா ராமச்சந்திரன், நிர்வாக இயக்குனர்கள் ராஜீவ் கிருஷ்ணா, மவுஸ்மி ராஜீவ் கிருஷ்ணா, முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, கல்விக்குழுமத்தின் பொதுமேலாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் வழங்கினார்
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் இந்திராணி நர்சிங் கல்லூரி மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறை பேராசிரியை டாக்டர் ஜமுனா ராணி வரவேற்றார். வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி எந்திரவியல் பேராசிரியர் மகிமைராஜ் விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 286 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். வெங்கடேஸ்வரா கல்விக்குழும முதல்வர்கள் மல்லிகா கண்ணன், டாக்டர் பிரதீப் தேவநேயன், ஆனந்த வைரவேல், கணேஷ் குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவப்பிரியா நன்றி கூறினார்.