< Back
புதுச்சேரி
புதுச்சேரி
13 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு
|3 July 2023 10:53 PM IST
புதுவையில் 13 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை கல்வித்துறையில் 13 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நிலை-2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்ட உள்ளது. இதற்கு தகுதியான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 28 பேரின் பட்டியலையும் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கலந்தாய்வு கல்வித்துறை கருத்தரங்க அறையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் கூகுள்மீட் மூலமும் கலந்துகொள்ளலாம். ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் உள்ளது.
மேற்கண்ட தகவலை துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.