< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மது பார் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்
|3 July 2023 11:23 PM IST
கோட்டுச்சேரி அருகே மது பார் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின்ரோட்டில் தனியார் மது பார் உள்ளது. இங்கு மது குடிக்க வந்த 2 பேர் பாருக்குள்ளே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பார் ஊழியர்கள் சிவா, ராஜசேகர் ஆகியோர் தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து பீர்பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக பார் ஊழியர்களை கொலைமிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் காசாளர் ராஜசேகர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பார் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது ராயன்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயபாலன், இந்திராநகரை சேர்ந்த ஞானசுந்தர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.