< Back
புதுச்சேரி
தம்பதிக்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி

தம்பதிக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
15 July 2023 11:13 PM IST

புதுவையில் வெடிகுண்டு வீசி கொன்று விடுவதாக தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மது (வயது 40). தொழிலாளி. அவரது மனைவி லதா (36). நேற்று இரவு இவர்கள் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோரத்தில் மதுகுடித்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (23) என்பவர் திடீரென மது மற்றும் அவரது மனைவி லதா ஆகியோரை வழிமறித்து தகராறு செய்தார். மேலும் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் திரண்டதால் ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்