< Back
புதுச்சேரி
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
6 Aug 2023 9:42 PM IST

நெடுங்காடு அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நெடுங்காடு

நெடுங்காடு தொண்டமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் உமாநாத். மீன்பிடி துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பபிதா (வயது 32). இவருடைய அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த லலிதா குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மனைவி மகாலட்சுமி (27), சேகர் மனைவி லலிதா (55), சேகர் மகன் வினோத்குமார் (26) ஆகியோர் பபிதாவின் வீட்டுக்கு சென்று அவரை தரக்குறைவாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் லலிதா உள்பட 3 பேர் மீது நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்