< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
|2 Aug 2023 11:01 PM IST
புதுவை வினோபா நகர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுவை வினோபா நகர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 48). சம்பவத்தன்று வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த சக்திநகரை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் (34) கோமதியின் கையை பிடித்து இழுத்தார். இதனை அவர் கண்டிக்கவே, ரமேஷ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.