< Back
புதுச்சேரி
தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி

தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
17 Sept 2023 10:39 PM IST

புதுவையில் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பவுலின் கேப்ரிட். இவருக்கு சொந்தமான வீடு ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ளது. இவரும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனும் சேர்ந்து அந்த வீட்டை கடந்த 2017-ம் ஆண்டு தங்கும் விடுதியாக மாற்றினர். இதற்காக ரூ.5 லட்சம் செலவானது. அதனை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இதற்கிடையே 2018-ம் ஆண்டு பவுலின் கேப்ரிட் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். எனவே அவர் அந்த தங்கும் விடுதியை கார்த்திகேயனை பார்த்து கொள்ளும்படி கூறி விட்டு சென்றார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த தங்கும் விடுதியில் வேலை செய்யும் தமிழ் என்பவரின் உறவினர் அந்தோணி சிலருடன் வந்து பவுலின் கேப்ரிட் மனைவி இந்துமதி தான் தங்களை அனுப்பினார். உடனடியாக தங்கும் விடுதியை காலி செய்ய வேண்டும் என்றும், நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக கார்த்திகேயனை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்