< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வேல்ராம்பட்டு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
|11 July 2023 11:26 PM IST
புதுவை வேல்ராம்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
புதுச்சேரி
புதுவை வேல்ராம்பட்டு ஏரியை குத்தகைக்கு எடுத்து தனியார் மீன்குஞ்சு வாங்கிவிட்டு வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் ஏரிக்கரை அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மீன்கள் செத்து மிதப்பதற்கு நோய் காரணமா? அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையா? கழிவுநீர் கலந்ததா? என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.