< Back
புதுச்சேரி
பாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
புதுச்சேரி

பாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

தினத்தந்தி
|
30 July 2023 10:58 PM IST

புதுவை பாகூர் ஏரியில் கடும் வெயிலால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

பாகூர்

புதுவையில் திடீர் மழை, கடும் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொளுத்தும் கடும் வெயிலால் ஏரி, குளங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒருசில ஏரிகளில் தண்ணீர் குறைந்து குட்டையாக மாறியுள்ளது.

புதுவையின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியும் கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது. இதனால் ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து, கரையோரம் மிதக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறந்த மீன்களை ஏரியில் இருந்து அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்