< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புயல் முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 211 நிவாரண மையங்கள் - புதுச்சேரி கலெக்டர் தகவல்
|3 Dec 2023 9:26 PM IST
புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கலெக்டர் வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் 'மிக்ஜம்' புயலை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜவர்மா தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசரகால மையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி கலெக்டர் வல்லவன், டி.ஜி.பி. சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் வல்லவன், புயல் முன்னெச்சரிகையாக புதுச்சேரியில் 211 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
சுமார் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.