மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்கள்
|புதுவை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
கையேடு வெளியீடு
நீட் தேர்வு அடிப்படையிலான எம்.பி.பி.எஸ். (மருத்துவம்), பி.டி.எஸ். (பல் மருத்துவம்), ஆயுர்வேதா படிப்புகளுக்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது. இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான கையேடு சென்டாக் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதி, குடியிருப்பு விவரம், வெளிநாடு வாழ் இந்தியருக்கான தகுதிகள், கலந்தாய்வுக்கான கட்டண விவரம், மாப்-அப் கலந்தாய்வின்போது செலுத்த வேண்டிய கட்டணங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்-ஆப் மதிப்பெண்
மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களையும் சென்டாக் வெளியிட்டுள்ளது. அதன்படி கதிர்காமம் அரசு இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு புதுவை பிராந்திய பொதுப்பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 482 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 474 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 437 ஆகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 235 ஆகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 127 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 377 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 418 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 321 ஆகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 205 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாகி பகுதியில் பொதுப்பிரிவினருக்கு 468 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 375 ஆகவும், ஏனாமில் பொதுப்பிரிவினருக்கு 377 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 311 ஆகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 251 ஆகவும் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள்
தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் கல்லூரிக்கு பொதுப்பிரிவினருக்கு 389, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 444, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 417, தாழ்த்தப்பட்டோருக்கு 277 ஆகவும் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணக்குள விநாயகர் கல்லூரிக்கு பொதுப்பிரிவினருக்கு 381, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 408, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 391, தாழ்த்தப்பட்டோர் 253 என கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கு அரசு கல்லூரியான கோரிமேடு மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரியில் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 323, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 339, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 331, தாழ்த்தப்பட்டோர் 186 என்றும், காரைக்காலில் பொதுப்பிரிவினருக்கு 282, இதர பிற்படுத்தப்பட்டோர் 324, மிகவும் பிற்படுத்தபட்டோர் 292, தாழ்த்தப்பட்டோர் 139 என கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை சென்டாக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.