< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொடுமை
|27 May 2022 11:37 PM IST
புதுவையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்ததாக தாய் மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி
பாகூர் அரங்கனூரை சேர்ந்தவர் ராசப்பன் (வயது 35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கனிமொழி (30) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார், 15 பவுன் நகையும், ரூ.5 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ராசப்பன், கனிமொழி தம்பதிக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை.
இதனை காரணம் காட்டி கனிமொழியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராசப்பன், அவரது தாயார் பேபி, அவரது அண்ணன் ராசாலியப்பன், அண்ணி ரேவதி ஆகியோர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுவை நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுச்சேரி மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.