< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது
|13 July 2023 9:59 PM IST
கோட்டுச்சேரி அருகே பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலகம் புறவழிச்சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திரு-பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திரு-பட்டினம் கே.பி.எம்.தோட்டத்தை சேர்ந்த சேத்தப்பா என்ற ஹமீது (வயது 32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.