< Back
புதுச்சேரி
காணும் பொங்கலை கொண்டாட புதுச்சேரி சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம்
புதுச்சேரி

காணும் பொங்கலை கொண்டாட புதுச்சேரி சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
17 Jan 2023 6:10 PM IST

புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தளங்களில் இன்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி,

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் இன்று மக்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அதே போல் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தளங்களிலும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் காணும் பொங்கல் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களுடன் இன்று காலை முதலே புதுச்சேரிக்கு வருகை தந்தனர்.

இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தளங்களான கடற்கரை சாலை, புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், தாவிரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்