< Back
புதுச்சேரி
பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரம்
புதுச்சேரி

பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரம்

தினத்தந்தி
|
1 July 2023 11:12 PM IST

புதுவையில் பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய வேளாண் அமைச்சகம் மாபெரும் விழிப்புணர்வு முகாம் நடத்த பரிந்துரை செய்துள்ளது. மேலும் வருகிற 7-ந்தேதி வரை பயிர் காப்பீட்டு வாரம் என்ற தலைப்பில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்