< Back
புதுச்சேரி
விடுபட்ட 437 விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் பயிர்காப்பீட்டு தொகை
புதுச்சேரி

விடுபட்ட 437 விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் பயிர்காப்பீட்டு தொகை

தினத்தந்தி
|
26 Sept 2023 9:43 PM IST

காரைக்காலில் விடுபட்ட 437 விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி கூறினார்.

காரைக்கால்

காரைக்காலில் விடுபட்ட 437 விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி கூறினார்.

பயிர்காப்பீட்டு தொகை

கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான விடுபட்டுபோன 437 பேருக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்கவேண்டும் என காரைக்கால் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட விவசாயிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் காரைக்கால் மாவட்ட விவசாயிகளை அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் வேளாண்மைதுறை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு வாரத்தில் வழங்க நடவடிக்கை

கூட்டத்தில் 2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையில், விடுபட்டு போன 437 பேருக்கும் இன்னும் ஒரு வார காலத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி கூறினார்.

மேலும் காரைக்கால் மாவட்டத்தில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சரி செய்யவும், புதிதாக அமைக்கவும் கூடுதல் வேளாண் இயக்குனருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

மேலும் செய்திகள்