< Back
புதுச்சேரி
புதுச்சேரி
போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை
|20 Sept 2023 11:39 PM IST
புதுவை கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி
புதுவையில் கஞ்சா போதை பொருட்கள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் மற்றும் வருவாய்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுவை மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய தீவிர நடவடிக்கை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.