< Back
புதுச்சேரி
முதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு கலந்தாய்வு
புதுச்சேரி

முதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு கலந்தாய்வு

தினத்தந்தி
|
19 Oct 2023 3:46 PM GMT

முதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடந்தது.

புதுச்சேரி

புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடந்தது. இந்த கலந்தாய்வின்போது பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இடம் கிடைத்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ தங்களது சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தகவலை சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அனுமதி

இதனிடையே இளநிலை மருத்துவ படிப்புகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கடந்த மாதம் 30-ந்தேதியுடனும், பல் மருத்துவ படிப்புக்கு கடந்த 15-ந்தேதியுடனும் மாணவர் சேர்க்கையை முடிக்க மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளால் புதுவையில் மருத்துவ கலந்தாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்று கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். இந்த சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்