< Back
புதுச்சேரி
பள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி
புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி

தினத்தந்தி
|
25 Oct 2023 10:41 PM IST

கிருமாம்பாக்கத்தில் கல்வித்துறை சாா்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடந்தது.

பாகூர்

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் இன்று நடைபெற்றது.

போட்டிகளை பள்ளி கல்வி வட்டம்-3 துணை ஆய்வாளர் லிங்குசாமி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வாம்பாள் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் தேச தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று மாறுவேடம் அணிந்து பங்கேற்றனர். மேலும் கட்டுரை, ஓவியம், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல், வினாடி வினா, பாட்டு பாடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்