மேலும் 8 பேருக்கு கொரோனா
|புதுவையில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி
புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 894 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு தொற்று உறுதியானது. புதுச்சேரியை சேர்ந்த 6 பேர், காரைக்காலில் 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 6 பேர் குணமடைந்தனர். 35 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 114 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 515 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 193 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 17 ஆயிரத்து 582 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி திருவிழா புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சமுதாய நலவழி மையங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.