< Back
புதுச்சேரி
ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
19 Aug 2023 10:46 PM IST

புதுவை தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை

தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருபுவனையில் இயங்கி வரும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக 61 ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று மாலை 5 மணி அளவில் உற்பத்தி பிரிவிலிருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அந் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி கார்த்திக், திருபுவனை போலீசில் புகார் அளித்தார்.

பேச்சுவார்த்தை

அதனைத் தொடர்ந்து தொழிற்சாலைக்கு வந்த திருபுவனை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். அப்போது ஊதிய உயர்வு குறித்து நிர்வாகம் தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை செய்யுங்கள். இல்லையேல் புதுச்சேரி தொழிலாளர் துறை அதிகாரியிடம் முறையிடுங்கள். அதனை விடுத்து, நிறுவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல என்று போலீசார் அறிவுரை கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்