< Back
புதுச்சேரி
பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி

பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 8:16 PM IST

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியாங்குப்பம்

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 110 வார்டுகளில் இந்த பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவது சம்பந்தமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கொம்யூன் ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற புதுச்சேரி மாவட்ட நீதிபதி ராமபத்திரன் கலந்துகொண்டு அங்கன்வாடி ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு ஆலோசனை வழங்கினார். அதில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரியாங்குப்பம் திட்ட அதிகாரி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செழியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்