< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
|3 July 2023 10:41 PM IST
புதுவையில் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி
புதுவை மாநிலத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகிற 7-ந் தேதி வருகிறார். அவரது வருகையையொட்டி புதுவையில் துறை ரீதியாக அதிகாரிகள் கூட்டம் நடத்தி, புதிய திட்டங்கள், ஏற்கனவே முடிந்த திட்டங்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், வீரவல்லவன், பழனிவேல், தாசில்தார்கள் ராஜேஷ் கண்ணா, அருண் அய்யாவு ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.